
இந்தியாவில் அதிக பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியலில் சென்னை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டின் இணைய வழி பண பரிவர்த்தனை குறித்து வெர்ட்லைன் இந்தியா நிறுவனம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின்படி அதிக பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை மூன்றாவது இடத்திலும், புனே நான்காவது இடத்திலும் இருக்கிறது. மேலும் சென்னை 1.43 கோடி முறை பணப்பரிவர்த்தனைகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.