உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்களை புலி ஒன்று அச்சுறுத்தி வருகின்றது. பவுரி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவங்களை தொடர்ந்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் அந்த 25 கிராமங்களிலும் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டுகின்றனர். புலி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒற்றையாக சுற்றி வரும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்