புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது. கூடிய விரைவில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து படிவம் 16-ஐ பெறுவீர்கள். அதன்பின் ஜூலை 31ம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். வரிப்பணம் தொடர்பான டென்ஷனில் நீங்கள் இருந்தால், இச்செய்தி உங்களுக்கு கண்டிப்பாக நிம்மதியை தரும். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன்னதாக உங்களது குடும்பத்திற்காக எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இன்று மியூசுவல் பண்டுகள் முதல் எஃப்டி -கள் வரை பல வித முதலீட்டு வகைகள் சந்தையில் கிடைக்கிறது. உங்களது சம்பளம் ரூபாய்.12 லட்சமாக இருந்தாலும் நீங்கள் ரூ.1 கூட வரி செலுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.