நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியம். மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அனுமதியும் மறுக்கக்கூடாது. பசியால் கஷ்டப்படுவோர் எங்கே இருந்தாலும் அவர்களை தேடி கண்டறிந்து பசியை போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.