திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும்  மதத்தின் அடிப்படையில் இத்தகைய உரிமையை கோருவது தவறு என கூற முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.