இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இதில் தனிநபரின் பெயர் உட்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் அடங்கியுள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியம் என்பதால் அதில் உள்ள விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகின்றது. அதில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் ஆன்லைன் மூலமாக அல்லது அரசின் இ சேவை மையம் மூலமாக அப்டேட் செய்து கொள்ள முடியும்.

இந்த விவரங்களை மாற்ற கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவை. இது இருந்தால் நீங்களாகவே வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்துவிடலாம். இந்த நிலையில் UIDAI முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆதார் கார்டின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியாது எனவும் இதனை மாற்ற அரசு ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.