கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் புது ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

ஆம் வெயிலில் இருந்து தப்பிக்க புது உத்தியை கையில் எடுத்துள்ளார். காரில் வெப்பத்தை தணிக்கும் வகையில், மாட்டு சாணத்தை எடுத்து கார் முழுவதும் பூசியுள்ளார் சுஷில் சாகர். இப்படி செய்வதால் சூரிய வெப்பம் தவிர்க்கப்பட்டு, ஏசி போட்டவுடனேயே கார் குளிர்ந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். மழை, தண்ணீரில் இருந்து பாதுகாத்தால் இந்த உத்தி 2 மாதத்திற்கு பயனளிக்கிறதாம்.