சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் தேதி ஹைதராபாத்தில் தலைமறைவான அவர் இன்று சென்னை வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த அதிகாலை சென்னை வந்த அவர் வடபழனியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார் ஹரிபத்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.