கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும்  கொல்லப்படுவது போன்றும் போலியான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையினரும், பீகார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வதந்தி வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. வதந்தி வீடியோவால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற சூழல் நிலவியது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் பதில்தர உத்தரவு பிறப்பித்தனர்.