இணையத்தில் தினம்தோறும் கோடிக்கணக்கான பதிவுகள் பகிரப்பட்டு அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஈர்க்கிறது. அந்த ஹிட் அடித்த பதிவுகளில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த பதிவு. தீவிர சினிமா ரசிகர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களை நாள், படத்தின் பெயர், கொட்டகை, மொழி, நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தனது கைப்பட எழுதி வைத்துள்ளார். அந்த நபர் அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்போது அந்த பதிவு நெட்டிசன்ஸ் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. அக்ஷய் என அறியப்படும் ட்விட்டர் பயனர் ஒருவர் இதனை படங்களுடன் ட்விட் செய்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பு தனது தாத்தா அவர் பார்த்த திரைப்படங்களை பதிவு செய்ய ஒரு நோட்டு புத்தகத்தை வைத்திருந்துள்ளார். இதை அவரின் லெட்டர் பாக்ஸ் எனவும் சொல்லலாம். அதன் மூலம் அவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தை பாரத்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட போது அது வியப்பை கொடுத்தது. அது போல அன்பே வா படத்தையும் அவர் பார்த்துள்ளார்.
அதோடு அந்த படம். செப்டம்பர் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படத்தையும் அவர் திரையரங்கில் பார்த்துள்ளார் என தாத்தாவின் புத்தகத்தைப் பார்த்து அதை பகிர்ந்துள்ளார். இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. மேலும் பலரும் இது குறித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 1958 முதல் 1974 வரையில் வெளியான படங்கள் குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.