தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் சென்ற ஜனவரி மாதம் 11-ம் தேதி ரிலீசானது.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிப்ரான் இசையில் இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிட்டான சில்லா சில்லா பாடலின் வீடியோ நேற்று ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றார்கள்.