தங்கலான் திரைப்படத்தின் பாடல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இக்கரை படத்தின் பாடல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்திருக்கின்றார்.

அதில் தங்கலான் திரைப்படத்தின் பாடல்களுக்கு மிக உற்சாகமாக இசையமைத்து வருவதாகவும் இரண்டு பாடல்களை பதிவு செய்து விட்டதாகவும் இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான சர்வதேச தரத்தில் பாடல்கள் உருவாகியுள்ளதாகவும் எனது இசையில் வெளிப்படாத அளவிற்கு இந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.