தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன் நடிகர் விஜய் பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசியதாவது, போக்கிரி படத்தில் நடித்த போது எனக்கும் விஜய்க்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. அதில் இருந்து நானும் விஜயும் பேசிக் கொள்வது கிடையாது.

நான் விஜயின் படங்களை கூட பார்ப்பது இல்லை. ஆனால் நான் தற்போது விஜயிடம் பேச தயாராக இருக்கிறேன். அவருடைய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். மேலும் விஜய் முதலில் என்னிடம் பேசுவதை விட அவர் அப்பா அம்மாவிடம் பேசட்டும். விஜய் அவருடைய அம்மா அப்பாவிடம் பேசவில்லை என அமெரிக்கா வரை தகவல் வந்துள்ளது. நான் கேள்விப்பட்ட தகவல் உண்மையாக இருந்தால் முதலில் விஜய் அவருடைய அம்மா அப்பாவிடம் பேசட்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.