உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது.

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தீபிகா படுகோனின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு தேசபக்தி திரைப்படமாக கொடுத்து அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட செய்துள்ளார்கள்.

இந்தநிலையில் இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 415 கோடி வசூல் செய்திருக்கின்றது. இந்திய அளவில் 200 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. மேலும் சென்ற வருடம் அமெரிக்காவில் வெளியான RRR திரைப்படம் முதல் சனிக்கிழமை அன்று 2.42 மில்லியன் வசூல் செய்தது. அமெரிக்கா திரையரங்குகளில் முதல் சனிக்கிழமை அன்று பதான் திரைப்படம் 2.85 மில்லியன் வசூல் செய்திருக்கின்றது.

மேலும் வட அமெரிக்காவில் தொடக்க வார இறுதியில் படம் 8 மில்லியனுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகுபலி-2, கே.ஜி.எஃப்-2 உள்ளிட்ட திரைப்படங்களின் வசூல் சாதனையை பதான் திரைப்படம் முறியடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.