முட்டை சுவையாகவும் எளிதாகவும் சமைக்க கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை எளிதில் சாப்பிடலாம். இதில் 6.3 கிராம் புரதம், 69 மில்லி கிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ 5.4 சதவீதம், கால்சியம் 2.2 சதவீதம், இரும்புச்சத்து 4.9 சதவீதம் உள்ளது. இருப்பினும் சிலர் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பொதுவாக தினமும் முட்டை சாப்பிடுவதால் எலும்புகளும் தசைகளும் பலப்படுத்தப்படும்.

அத்துடன் மூளை கூர்மையாவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. பல நன்மைகள் இருந்த போதிலும் முட்டைகள் சிலருக்கு கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடக் கூடாது. ஆய்வு அறிக்கையின்படி வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு 39 சதவீதம் நீரழிவு நோய் ஏற்படுவதற்கு சாத்தியம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோயாளிகள் முட்டை சாப்பிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும். இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ரத்த அபாயத்தையும் அதிகரிக்கிறது. வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேல் முட்டையை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. முட்டை ஓடுகள் பெரும்பாலும் சால்மோனல்லா பாக்டீரியாவால் மாசுபடுகின்றன. இது ஒரு பாக்டீரியா தொற்று.

இது வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் உணவு நச்சு தன்மையை ஏற்படுத்துகின்றது. உங்கள் செரிமானம் பலவீனமாக இருந்தால் அசுத்தமான முட்டையை கழுவாமல் பயன்படுத்தும் போது எளிதாக புட் பாய்சனிங் ஆகலாம். இதனை கருத்தில் கொண்டு அதிக அளவு முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பதோடு ஆம்லெட், ஆஃப் பாயில் என்று எண்ணெயில் பொரித்த முட்டைகளை விட வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவது நல்லது.