திருப்பூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட நாட்களில் சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் அருகே இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடுத்த மாதம் 5, 6, 7 உள்ளிட்ட தேதிகளில் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திருப்பூர், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்வது பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிரிவலப் பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது, போலீசார் குறிப்பது, மருத்துவ வசதிக்காக தயார் நிலையில் வாகனங்களை வைப்பது, தனியார் ஆக்கிரமிப்புகளை மலையடிவாரத்தில் நெரிசலை குறைப்பதற்காக அகற்றுவது, மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு கூடுதல் பேருந்துகளை இயக்குவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.