கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் திடீரென படபிடிப்பிலிருந்து தனுஷ் கிளம்பியதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் படக்குழு ஒரு செட் அமைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. மேலும் குற்றாலத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இதனிடையே தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.