ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்திற்கான முதல் கட்டப்பணியில் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இத்திரைப்படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில் சூட்டிங் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக இருக்கின்றது. இந்த படத்தில் அஜித் தனது உடல் எடையை குறைக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவி வருகின்றது. இத்திரைப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்து வருகிறது.