பிக்பாஸில் தற்போது எலிமினேஷன் ஒன்று நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. முடிவடைய இருக்கும் பிக்பாஸில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்கள். இதனால் நான்கு போட்டியாளர்களான அசீம், விக்ரமன், சிவின், மைனா நந்தினி உள்ளிட்டோர் இறுதி போட்டியாளராக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நேற்று எதிர்பாராவிதமாக ஒரு எலிமினேஷன் நடந்துள்ளது. எலிமினேஷனுக்காக ஹைட்ராலிக் மேல் போட்டியாளர்கள் நிற்க வேண்டும் எனவும் அது கீழே இறங்கி மேலே வரும் போது போட்டியாளர் இல்லை என்றால் அவர் எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் மைனா நந்தினி எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இதனால் பிக் பாஸ் சீசன் 6 பைனல் போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், சிவின் உள்ளிட்டோர் மட்டுமே இருக்கப் போகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.