பதான் திரைப்படத்தின் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகின்றது.
உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது முன்பதிவில் மாஸ் காட்டி வருகின்றது. வருகின்ற 25ஆம் தேதி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி இருக்கின்றது.
டெல்லியில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் 2,200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மும்பையில் 200 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை தொடங்கி 1450 வரை விற்கப்படுகின்றது. மேலும் மும்பையில் சில தியேட்டரில் ஒரு நாளைக்கு 15 காட்சிகள் திரையிட திட்டமிட்டு இருக்கின்றார்கள். இத்திரைப்படம் 250 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதன் ஓடிடி உரிமம் 100 கோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த படத்தில் மற்ற உரிமங்கள், முன்பதிவு வசூல் உள்ளிட்டவை மூலம் படத்தின் தயாரிப்பு செலவு மீட்க பட்டுவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.