தெலுங்கு வாரிசு திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சி பைடிபள்ளி 2007 ஆம் வருடம் பிரபாஸ் நடிப்பில் வெளியான முன்னா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்கி உள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படம் ஆகும். மேலும் ஜனவரி-14 தேதி தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்ட வாரிசு திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
தற்போது படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கின்றது. முதல் நாளில் மட்டும் அந்தந்த மாநிலங்களில் ஐந்து கோடி ரூபாய் வசூலித்த வாரசுடு திரைப்படம் அடுத்த நாட்களில் வசூலில் படுத்து விட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த திரைப்படங்களுடன் வாரசுடு படமும் வெளியானது. இந்த நிலையில் அவர்களின் திரைப்படத்துடன் மோத முடியாமல் வாரசுடு திரைப்படம் பின்னடைவை சந்தித்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.