சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டி-20யில் சதம் அடித்த பின்னர் கோலியின் ஆட்டம் வெகுவாக மாறி உள்ளது. மூன்று சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முறியடிப்பாரா என கேள்வி எழுந்த வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என இந்திய முன்னால் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சின் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் திறனோடும் அவர் இருந்தார் எனவும் ஆண்டுக்கு ஆறு அல்லது ஏழு சதங்களை விராட் கோலி பதிவு செய்தால் அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் 100 சதங்கள் என்ற மைல் கல்லை எட்டுவார் எனவும் கூறியுள்ளார்.