நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது. முன்னதாக இலங்கைக்கு எதிராக டி20 தொடரை 2:1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3:0 என்ற கணக்கிலும் முழுமையாக வென்று அசத்திய இந்திய அணி அதே உத்வேகத்துடன் இந்த தொடரையும் கைப்பற்றும் எனது பார்க்கப்படுகிறது. இப்போட்டில் காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் விலகி உள்ளதால் சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனின் இடம் கிடைத்துள்ளது.

இந்திய XI: 

ரோஹித் ஷர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்,ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நியூசிலாந்து X I:

பின் ஆலன், டெவான் கான்வே, எச் நிக்கோல்ஸ், டி மிட்செல், டாம் லாதம் (கே &வி.கீ), கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், எச் ஷிப்லி, பி டிக்னர், லாக்கி பெர்குசன்.