ஜி.வி பிரகாஷ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றார் ஜி.விபிரகாஷ். இவர் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் வெளியான பேச்சுலர், ஐங்கரன், ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது கள்வன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கி வருகின்றார். மேலும் படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேட்டரி தயாரிக்க பாரதிராஜா, இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் நேற்று மாலை 4.44 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது. இதனை நடிகர் சூர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.