மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் கமிஷனராக பதவியேற்றுக்கொண்ட நரேந்திரன் நாயர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சித்திரை திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் எந்தவித அச்சம், இடையூறு இல்லாமல் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும். தூங்கா நகரமான மதுரை கலாச்சாரம் மிகுந்த நகரம், சட்ட ஒழுங்கு, ரவுடிசம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தென் சென்னையில் இணை கமிஷனராக நான் ஏற்கனவே பணிபுரிந்து இருக்கின்றேன். இதனால் தற்போது மதுரையிலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.