நடிகர் கிஷோருக்கு கன்னட திரை உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் கிஷோர் வில்லன், குணச்சித்திர வேடம் என இரண்டிலும் நடித்து வருகின்ற நிலையில் இவர் அண்மைக்காலமாக சோசியல் மீடியாவில் பகிரங்கமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழிகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய கேஜிஎப் திரைப்படத்தை கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் எனக்கு கேஜிஎப் போன்ற திரைப்படங்கள் பிடிக்காது எனவும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தை பார்க்கவில்லை எனவும் இது போன்ற திரைப்படங்களுக்கு பதிலாக நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனால் இவருக்கு கன்னட திரை உலகில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட ரசிகர்கள் பலரும் இவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்கள். இந்த நிலையில் கேஜிஎப் அர்த்தமற்ற படம் என்று நான் பேசவில்லை என விளக்கம் அளித்திருக்கின்றார்.