காரோடு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு சாருக்கான் நிதி உதவி வழங்கியுள்ளார்.

சென்ற வாரம் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற இளம்பெண் ஓட்டி சென்ற இருசக்கர வாகனமும் காறும் மோதியது. இதில் கார் நிற்காமல் சென்று விட்டது. இதில் அஞ்சலியின் ஒரு கால் காரில் சிக்கி 12 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் டிரைவர் உள்ளிட்ட காரில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

அஞ்சலியின் வருமானத்தை நம்பி தான் அவரின் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இதனை கேள்விப்பட்ட நடிகர் ஷாருக்கான் தனது அறக்கட்டளை மூலமாக அஞ்சலியின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவல் வெளிவரவில்லை. ஷாருக்கான் தனது அறக்கட்டளை மூலமாக ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி வருகின்றார் குறிப்பிடத்தக்கது.