கிரிவல பாதையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் இருக்கும் மலையை சுற்றி கிரிவல பாதை அமைந்திருக்கின்றது. இந்த கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடப்பதகாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றது இதனால் போலீசார் கிரிவல பாதையில் சோதனை மேற்கொண்டு பிடித்து வருகின்றார்கள். ஆனால் கஞ்சா விற்பனை மட்டும் குறைவில்லாமல் நடந்து வருகின்றது. இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காவி வேட்டி அணிந்து கிரிவலப் பாதையில் கஞ்சா போதையில் அங்கிருந்த நடைபாதை கடைகளை தாக்கினார்.

இதனால் அங்கிருந்து நபர்கள் தடுக்க முயன்ற போது ஆபாச வார்த்தைகளால் சாடினார். இதனால் பொதுமக்கள் அவரின் கை மற்றும் கால்களை கட்டி போட்டார்கள். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சிறிது நேரம் கழித்து அங்கிருந்தவர்களே கயிற்றை அவிழ்த்து விட்டார்கள். காவி வேட்டி கட்டிய இளைஞர் ஒருவர் போதையில் கடைகளை தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் கிரிவலப் பாதையில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.