வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களுக்கும் நடிகர் பிரபு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது.

இரண்டு திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. மேலும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட்டுகள் காலியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் நடிகர் பிரபு வாழ்த்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் பிரபு வந்திருந்தார். பிரபுவிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர் தெரிவித்ததாவது, அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு திரைப்படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள் தான். இருவரின் திரைப்படங்கள் வெற்றி பெறட்டும், சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.