தனலட்சுமி பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். மிகவும் டப் போட்டியாளராக வளம் வந்த நிலையில் திடீரென அவர் எழுமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமி லைவில் வந்தார். அப்போது பேசிய அவர் பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆனதை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆனதாகவும் மேலும் வீட்டில் சில பிரச்சனைகள் இருந்ததால் உடனடியாக லைவ் வர முடியவில்லை என தெரிவித்தார். மேலும் அவரிடம் பிக் பாஸ் வீடு மற்றும் சக போட்டியாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது, அசீம் தான் தனக்கு பிடித்த போட்டியாளர் எனவும் கதிர், ரச்சிதா தங்கள் உண்மை முகங்களை காட்டாமல் விளையாடுவதாகவும் தெரிவித்தார். மேலும் விக்ரமன் பிக் பாக்ஸ் கேமில் தேவையில்லாத ஆள். லெட்டர் டாஸ்க் மற்றும் வேறு சில டாஸ்குகளை விக்ரமன் கேம் மாதிரி விளையாடாமல் வேறு மாதிரி கொண்டு சென்றார். இவரின் இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.