யூடியூப் சேனல் மூலம் விஜேவாக அறிமுகமான பார்வதி தனியார் சேனலில் ஒளிபரப்பான சர்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார். தற்போது சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தன்மீது எழும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தனக்கான பாதையில் முன்னேறி வருகின்றார்.
இந்த நிலையில் பார்வதி தனது கனவு காரான ஜீப் கம்பெனியின் காம்பஸ் ரக காரை வாங்கி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். மேலும் மறைந்த தனது தந்தையின் முன்பு காரணம் சாவியை வைத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த காரின் அடிப்படை ஆரம்ப விலை 21 லட்சத்துக்கு மேலாகும். அவரின் முன்னேற்றத்தைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி வருகின்றார்கள்.