ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதேபோல் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.இத்திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 திரைப்படங்களின் FDFS காட்சிக்கான டிக்கெட் வாங்குவதற்ககாக காசி தியேட்டர் முன்பு இன்று பெரும்பாலான ரசிகர்கள் திரண்டனர். எனினும் FDFS காட்சி டிக்கெட்டுகள் விற்பனை இல்லை, முடிந்து விட்டது என்று திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.