வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது.

இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டை கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் இருக்கும் தொலைக்காட்சி அனைத்திலும் நேற்று வாரிசு ட்ரைலர் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஆரவாரம் செய்துள்ளனர். ஐடி நிறுவனமா? அல்லது தியேட்டரா.? என சந்தேகப்படும் அளவிற்கு இந்த கொண்டாட்டம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.