திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் சென்ற 1994 ஆம் வருடம் வெளியான வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரகதி. இந்த நிலையில் 47 வயதாகும் இவருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக வதந்தி பரவியது. இவர் தனது 21 வயதில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சில வருடங்களிலே தனது கணவரை விவாகரத்து செய்து தனது மகன்களுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரின் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, எனக்கு தற்போது 47 வயதாகின்றது. இந்த வயதில் மறுமணம் என்பதை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. தனிமையாகவே இதுவரை இருந்து விட்டேன். இனிமேல் ஒரு துணையை தேடுவது எனக்கு சரியாக இருக்காது. பல சிக்கல்களை நான் தனியாகவே சந்தித்து அதிலிருந்து மீண்டு இருக்கின்றேன். ஆகையால் இனிமேல் நான் துணை தேட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.