நடிகை மகாலட்சுமி தற்போது சுடிதார் விளம்பரத்தில் களமிறங்கியுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது.

மஹாலக்ஷ்மி சேலைகள், அழகு சாதன பொருட்கள், ஸ்னாக்ஸ் பொருட்கள், நகைகள் என அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விளம்பரப்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்ற நிலையில் தற்போது சுடிதார் அணிந்து அதையும் பதிவிட்டு விளம்பரப்படுத்தி இருக்கின்றார். நைரா கட் பிரின்ட்டட் சுடிதார் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கின்றார். மேலும் அது பற்றி எடுத்து கூறியும் இருக்கின்றார். இந்த புகைப்படங்களை பார்த்த இணையதள வாசிகள் சேலை போய் சுடிதார் விளம்பரத்திற்கு வந்தாச்சா என கேட்டு வருகின்றார்கள்.