தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துணிவு திரைப்படம் உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரிஸில் உள்ள உலகின் பெரிய தியேட்டரான Grand Rex தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இந்த தியேட்டரில் 2700 இருக்கைகள் இருக்கிறது. மேலும் இந்த தியேட்டரில் தற்போது துணிவு திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.