நியூயார்க்கில் இயக்குனர் ராஜமவுலிக்கு விருது வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை குவித்தது. 2023 ஆஸ்கர் போட்டியில் இந்த படம் பங்கேற்கின்றது. இதை தவிர்த்து கோல்டன் குளோப் விருது பிரிவிலும் இரண்டு விருதுகள் பிரிவில் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கிய ராஜமௌலிக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கி கௌரவித்திருக்கின்றது.

இந்த விழாவில் ராஜமௌலி மற்றும் அவரின் மனைவி பங்கேற்றனர். விருந்து வழங்கும் விழாவில் பேசிய ராஜமௌலி, இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி தென்னிந்தியாவிலிருந்து வந்த சிறிய படத்தை நிறைய பேர் கவனிக்ககின்றார்கள். வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் பார்வையாளர்களை பார்க்க போது அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரம்மிப்பு தெரிந்தது. தியேட்டர்களில் படம் பார்க்கும் மகிழ்ச்சியே விரும்புகின்றேன் என பேசினார்.