துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆபாச வசனங்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. சென்ற டிசம்பர் 31-ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்ததை தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் ஆபாச வசனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இருக்கின்றது. சர்ச்சைக்குரிய வசனங்கள் கேட்காத அளவிற்கு 17 இடங்களில் பீப் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.