இந்தியாவிற்காக புது ரெனால்ட் டஸ்டர் கார் தயாராகின்றது.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024- 2025 இல் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார்களை வெளியிட ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய முதலீட்டின் மூலம் ரெனால்ட் நிறுவனம் CMS B பிளாட்பார்மை இந்தியாவிற்கு கொண்டுவரும் என தெரிகின்றது. முற்றிலும் புது டஸ்டர் மட்டுமின்றி ரெனால்ட் நிறுவனம் தனது விக்சர் கான்செப்ட் தழுவி 7 feeter SUB மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.