இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்தால் ஏற்படும் ஆபத்து.
சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. தற்போது ஜீன்ஸ் அணிவது ஸ்டைலாக இருப்பதால் புதுப்புது நிறங்களிலும் அவற்றின் அலங்கரிப்பாலும் நாம் கவரப்பட்டு அதனை வாங்கி உடுத்திக் கொள்கின்றோம். இவ்வாறு நாம் இறுக்கமாக அணிவதால் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்களின் கீழ் முதுகு இடுப்புக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை சீர்குலைக்கும். மேலும் அவை அதிகப்படியான கீழ் முதுகு வளைவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவை உங்கள் முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிவது சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மற்றும் பிற தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.