இனி இந்த மாடல் செல்போன்களில் what’s app இயங்காது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ் அப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் செயலி அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக அக்டோபர் மாதம் what’s app ஆனது ஜபோனின் வகைகள், சாம்சங், கியூவாய், எல்.ஜி, சோனி, ZTE, HTC, Lenovo மற்றும் ஆல்க்டெல் ஆகியவற்றிலிருந்து 40-க்கு குறைவான ஆண்ட்ராய்டு சாதனங்களை இனி ஏற்காது என்று வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து whatsapp பயனாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் காலவதியான மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்டுள்ள போன்களில் மட்டுமே நிறுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள், ZTE, HTC, HUAWEI, Lenovo, LG, Samsung, Sony, Vika குறித்த தொலைபேசிகளில் டிசம்பர் 31-ஆம் தேதி வாட்ஸ் அப் சேவையை நிறுத்தியுள்ளது.