உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த whatsapp செயலியில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் எப்படி ஊபர் டாக்ஸி புக் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஊபர் டாக்சி வசதியை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முதலில் நீங்கள் Uber account-ல் பயன்படுத்தும் செல்போன் எண்ணை வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வாட்ஸ் அப்புக்குள் சென்று Uber chatbot உடன் சாட் செய்ய வேண்டும். இதை தொடங்குவதற்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பினால் போதுமானது. அதன்பிறகு நீங்கள் இருக்கும் இடம் பற்றிய முழு விவரங்களையும் அதில் அனுப்புவதோடு, தேவைப்பட்டால் உங்களின் லைவ் லொகேஷன் கூட அனுப்பலாம். இதனையடுத்து உங்களுடைய பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் அருகில் இருக்கும் ஊபர் டாக்சி டிரைவர்கள் யாராவது உங்கள் பயணத்தை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வருவதோடு, உங்களின் பயண தூரம் மற்றும் கட்டணம் தொடர்பான மெசேஜும் உங்கள் வாட்ஸ் அப்புக்கு வந்துவிடும்.