இந்தியாவில் டிஜிட்டல் யூகம் தொடங்கிவிட்ட நிலையில், இணையதள பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. அதன் பிறகு பலர் இன்டர்நெட் பயன்படுத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் இணைய வேகம் அதிகமாக இருக்காது. இதனால் வேலையை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இந்நிலையில் இணையவேகம் அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை தற்போது பார்க்கலாம். அதன்படி நாம் தினசரி பயன்படுத்தும் வெப் ப்ரௌசர் அதிகப்படியான ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்பதால், அதில் வசதிகளும் அதிகம்.

ஆனால் இதை பயன்படுத்துவதற்கு இணைய வேகம் அதிக அளவில் தேவைப்படும். எனவே நமக்கு பிரௌசர் தேவை இல்லை என்றால் chorome Lite, Opera Mini,. Firefox life போன்ற குறைவான ஸ்டோரேஜ் கொண்ட பிரௌசர்களை பயன்படுத்தினால் இணைய வேகம் அதிக அளவில் இருக்கும். தேவையில்லாத Tab பலவற்றை மூடுவதன் மூலமும் இணையவேகம் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் வைஃபை கனெக்ஷன் இருந்தால் அதன் அருகில் இருந்து இன்டர்நெட் பயன்படுத்தினாலும் இணைய வேகம் அதிக அளவில் இருக்கும்.

சிக்னல் குறைவான இடத்தில் இன்டர்நெட் பயன்படுத்தினால் இணைய வேகம் குறைவாகத்தான் இருக்கும். உங்கள் வீட்டில் பயன்படுத்தும் வைஃபை மூலம் அதிகப்படியான பொருட்களை கனெக்ட் செய்திருந்தால் கூட இணைய வேகம் குறைவாக இருக்கும். எனவே தேவையில்லாத கனெக்சன்களை துண்டிப்பதன் மூலமும் இணைய வேகம் அதிகரிக்கும். மேலும் நீங்கள் வீடியோ பார்க்கும்போது முடிந்த அளவுக்கு ஆட்டோ மோடில் போட்டு பார்க்க வேண்டும். இதனால் உங்கள் இணைய வேகத்திற்கு ஏற்றார் போன்று வீடியோ தரம் மாறிக்கொள்ளும். ஒருவேளை வீடியோவின் தரம் அதிகமாக இருந்தாலும் கூட அதிக அளவு டேட்டா காலியாகும்.