இன்றைய தலைமுறையினர் அனைவரும் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழலுக்கு வந்து விட்டனர். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைப் பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் இவ்வாறு கண்டிப்பாக நடத்தினால் உடனே தவறான முடிவை பிள்ளைகள் எடுத்து விடுகிறார்கள். அவ்வாறான அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் 90 அடி உயரத்திலிருந்து விழும் சித்ரகோட் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் சில அடிகள் தூரத்தில் பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இதற்கு காரணம் மொபைல் போன் பயன்படுத்தியதால் பெற்றோர்கள் கண்டித்த காரணத்தால் மனம் உடைந்து அந்தப் பெண் இந்த தற்கொலை முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது. தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.