அனிமே சீரிஸ்கள் இன்று உலகம் முழுவதும் வெகு பிரபலமாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் முன்னோடி டிராகன் பால் ஜீ என்ற அனிமே சீரிஸ் தான். 1989 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரிசை 90ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது. இதனை உருவாக்கிய அகிரா டோரியாமா 68 வயதில் காலமானார். ஜப்பானை சேர்ந்த இவர் மறைந்தாலும் அவருடைய கதாபாத்திரங்கள் நெஞ்சில் நிலைக்கும்.