கடந்த சில காலமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த ஹிந்தி தொலைக்காட்சி நடிகை டோலி சோஹி (48) இன்று காலமானார். முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவரது சகோதரி அமந்தீப் சோஹி நேற்று உயிரிழந்தார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு நடிகைகள் உயிரிழந்துள்ளது . இந்தி தொலைக்காட்சி துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.