புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் ஜூன் 14ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்   கடும் வெயிலால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதை ஈடு செய்ய 9 சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24.06.23 (வியாழன்) பாடத்திட்ட படியும், 08.07.23 (வெள்ளி), 22.07.23 (திங்கள்) 12.08.23 (செவ்வாய்), 26.08.23 (புதன்), 09.09.23 (வியாழன்), 23.09.23 (வெள்ளி) 14.10.23 (திங்கள்) 28.10.23 (செவ்வாய்) பாடத்திட்ட படி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.