ரஷ்ய அரசு, புத்தாண்டு தொடக்கத்தில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யவீரர்கள் 89 பேர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் டோனெட்ஸ்க் என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மகீவ்கா என்னும் பகுதியில் ரஷ்ய படையினர் வசித்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தொடக்க நாள் அன்று நள்ளிரவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் ஹிமார்ஸ் ரக ராக்கெட்டுகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையைச் சேர்ந்த ராக்கெட்டுகள் அமெரிக்காவில் தயார் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் ரஷ்யப்படையினர் 400 பேர் உயிரிழந்ததாகவும், 300 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை, மறுத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலில் வீரர்கள் 89 பேர் பலியானதாக உறுதிப்படுத்தியுள்ளது.