மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மகர்பட்டா பகுதியில், கடந்த ஜனவரி 24-ம் தேதி இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 7 முதல் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், அங்குள்ள ஒரு பான் கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அசிங்கமான வார்த்தைகளால் திட்டியபடியே, கடையிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிச் சூறையாடிய அந்தக் கும்பல், கடைக்காரரைக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “சட்டம் ஒழுங்கு எங்கே போனது?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த ரவுடி கும்பலைத் தேடி வருகின்றனர்.