உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசி ராம் என்பவருக்கும், மஞ்சரி தேவிக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகத் தங்களுக்குள் தாம்பத்திய உறவு இல்லை என்றும், இதனால் தான் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் காசி ராம் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த காசி ராம் மீண்டும் மனைவியிடம் முறையிட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த காசி ராம், சமையலறைக்குச் சென்று கத்தியால் தனது பிறப்புறுப்பைத் தானே அறுத்துக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்களின் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, துண்டிக்கப்பட்ட உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. காசி ராம் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது மனைவி மஞ்சரி தேவி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அன்று இரவு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்ததால் தான் அவருடன் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். தற்கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்துள்ள போலீசார், இது குடும்பப் பிரச்சனையா அல்லது போதையால் ஏற்பட்ட விபரீதமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
